சிவ பஞ்சாசன வேதிகை விளக்கம்

நமது வீட்டிற்கு வரும் பெரியோர்கள் . விருந்தினருக்கு இருக்கை வழங்கி அமரச் செய்கின்றோம் . இது போன்று பொது நிகழ் வில் அவர்களின் தகுதிக்கேற்ப ஆசனம் கொடுத்து கௌரவிக்கின்றோம் . இறைவ னை ஆவாஹனம் செய்யும் போதும் இது போன்ற சிறந்த ஆசனத்தை மந்திரபூர்வமாக வழங்கி பூஜை செய்கின்றோம் . சிவாசனத்தின் மாதிரியுரு கிழே உள்ளது .
இது #பஞ்சாசனம் என அழைக்கப்படும் . இது ஸ்திராசனம் என்றும் அழைப்பர் . ( ஸ்திரம் உறுதி ) உறுதியான ஆசனம் . கூர்மாசனத்தின் மேல் அனந்தாசனம் , சிம்மாசனம் , யோக சனம் , பத்மாசனம் , விமலாசனம் என ஐந்து ஆசனங்களையும் கொண்டது பஞ்சாசனம் . இதை தாங்குவது #கூர்மாசனம் . கூர்மம் ஆமை ) கூர்மாசனத்தில் வெள்ளை நிறமும் தலையில் முளையுடன் கூடிய விதைகளை யும் , வரதம் , அபயம் , அங்குசம் , பாசம் என்பவற்றை கரங்களில் தாங்கி எல்லாவற் றிக்கும் ஆதாரமாக இருப்பவளாய் ஆதார -சக்தி பூசிக்கப்படுகின்றாள் .
#அனந்தாசனம் : ஆனந்தன் என்னும் வெண்மையான பாம்பு மூன்று சுற்றுக்களுடன் அமைந்ததாகும் . காலப்போக்கில் ஒரு பாம்பிற்குப் பதிலாக அனந்தன் , வாசுகி , தக்ஷகன் , கார்கோடகன் , சங்கபாலன் , குளிகன் , பதுமன் , மகாபதுமன் ஆகிய எட்டு நாகங்கள் பூசிக்கப்படுகின்றது
#சிம்மாசனம் : தர்மம் , ஞானம் , வைராக்கியம் , ஐஸ்வரியம் என்பன நான்கு மூலைகளிலும் , அதர்மம் , அஞ்ஞானம் , அவை ராக்கியம் , அனைஸ்வரியம் என்பன திக்குகளிலுமாக எட்டுச் சிங்கங்கள் சிவாசனத்தை தாங்குவதாகவும் . ( மூலைகளில் நான்கு சிங்கங்களாகவும் திக்குகளில் நான்கு பலகை ரூபமாகவும் பூசிக்கலாம் ) வலம் , இடம் , மத்தியில் ராஜசம் , தாமசம் , சாத்துவிகம் எனும் முக்குணங்களும் பூசிக்கப்படுகின்றது .
#யோகாசனம் : கோணங்களில் நான்கு யுகங்கள் பூத வடிவிலும் திக்குகளில் அவ்யக்தன் , நியதி , காலம் , கலை என்பனவும் நான்கு பூத வடிவமாக அமைந்து ஆசனத்தை தாங்குகின்றன . திக்குகளை பலகை ரூபமாகவும் பூசிக்கலாம் . அதற்கு மேல் அதச்சதனம் , ஊர்த்துவச்சதனம் எனும் இரண்டு மெத்தைகள் பூசிக்கப்படுகின்றது . பத்மாசனம் : தாமரையின் கிழங்கு , முளை , தண்டு , தண்டில் உள்ள முட்கள் , எட்டு இதழ்கள் . கேசரங்கள் , கர்ணிகை , அதில் உள்ள விதைகள் பூசிக்கப்படுகின்றது . ஆதாரசக்தியின் தலையிலிருந்து தாமரைப்பூ முளைத்து மேல் வருவதாக பாவிக்கப்படுகின்றது .
#விமலாசனம் : தாமரையின் கேசரங்களில் கிழக்கிலிருந்து வாமை முதலிய எட்டு சக்திகளும் கர்ணிகையின் வடகிழக்கில் மனோன்மணியும் பூசிக்கப்படுகிறார்கள் . தாமரை இதழ்களின் நுனி வட்டத்தில் சூரிய மண்டலமும் அதிபதி பிரம்மாவும் , கேசரங்களின் நுனிவட்டத்தில் சோம மண்டலமும் அதிபதி விஷ்ணுவும் கர்ணிகையின் நுனிவட்டத்தில் அக்கினி மண்டலமும் அதிபதி உருத்திரனும் கர்ணிகையின் மத்தியில் சக்தி மண்டலமும் அதிபதி ஈஸ்வரனும் பூசிக்கப்படுகிறார்கள் . இதுவே சிவனுடைய பஞ்சாசனமாகும் .

Comments