Rigveda with Tamil description
ঋগ্ৱেদঃ মণ্ডলং ১
অগ্নি
অগ্নিমীৰে পুরোহিতং যজ্ঞস্য দেৱমৃত্ৱিজম্ ।
হোতারং রত্নধাতমম্ ॥ ১.০০১.০১
1. நான், புரோகிதனும், யக்ஞத்தின் தேவனும், இரத்தினமளிப்பவனும், ஹோதாவுமான அக்கினியைப் போற்றுகிறேன்.
অগ্নিঃ পূর্ৱেভিরৃষিভিরীড্যো নূতনৈরুত ।
স দেৱাঁ এহ ৱক্ষতি ॥ ১.০০১.০২
2. பழைய ரிஷிகளாலும், புதிய ரிஷிகளாலும் போற்றத் தகுந்தவனுமான அவன் இங்கு தேவர்களை ஏந்தி வருவானாக.
অগ্নিনা রযিমশ্নৱত্পোষমেৱ দিৱেদিৱে ।
যশসং ৱীরৱত্তমম্ ॥ ১.০০১.০৩
3. அக்கினியைத் தினந்தோறும் வழிபடுபவன் செழிப்பதும், சிறப்புள்ளதும், மக்களைப் பெருக்குவதுமான செல்வத்தைப் பெறுகிறான் .
অগ্নে যং যজ্ঞমধ্ৱরং ৱিশ্ৱতঃ পরিভূরসি ।
স ইদ্দেৱেষু গচ্ছতি ॥ ১.০০১.০৪
4. அக்கினியே! உன்னால் எங்கும் பரத்தப்படும் இன்னலாகாத யக்ஞமானது தேவர்களிடஞ் செல்லு
অগ্নির্হোতা কৱিক্রতুঃ সত্যশ্চিত্রশ্রৱস্তমঃ ।
দেৱো দেৱেভিরা গমত্ ॥ ১.০০১.০৫
5. ஹோதாவும், அறிஞனும், செயலாளனும், சத்திய லும், மிக்கப் புகழுள்ளவனும், தேவனுமான அக்கினி தெவர்களோடு இங்கு வருவானாக .
যদঙ্গ দাশুষে ত্ৱমগ্নে ভদ্রং করিষ্যসি ।
তৱেত্তত্সত্যমঙ্গিরঃ ॥ ১.০০১.০৬
6. அக்கினியே! அங்கிரஸனே! அளிப்பவனுக்கு உடன்னால் செய்யப்படும் நலமெல்லாம் உனக்கே நிச்சய மாகத் திரும்பும் .
উপ ত্ৱাগ্নে দিৱেদিৱে দোষাৱস্তর্ধিযা ৱযম্ ।
নমো ভরন্ত এমসি ॥ ১.০০১.০৭
7. அக்கினியே! நாங்கள் தினந்தோறும் இரவிலும் பகலிலும் மனத்தில் வணக்கஞ் செய்பவர்களாய் உங்களிடம் வருகிறோம் .
রাজন্তমধ্ৱরাণাং গোপামৃতস্য দীদিৱিম্ ।
ৱর্ধমানং স্ৱে দমে ॥ ১.০০১.০৮
8. நாங்கள், துலங்குபவனும், யக்ஞங்களைப் பாலிப்பவனும், சத்தியத்தைச் சதா துலக்குபவனும், உன்னுடைய சொந்த இடத்திலே வளர்பவனுமாக உன்னிடம் வருகிறோம்.
স নঃ পিতেৱ সূনৱেঽগ্নে সূপাযনো ভৱ ।
সচস্ৱা নঃ স্ৱস্তযে ॥ ১.০০১.০৯
9. அக்கினியே! நாங்கள் உன்னிடம் சுலபமாய் வர மகனிடம் தந்தைபோல் இருக்கவும் : எங்களுடைய நன்மைக்காக எங்களிடம் எப்பொழுதும் நிலைக்கவும்.
இருக்கு வேதம்- மண்டலம் 01 (தமிழ் விளக்கத்துடன்) இதை முழுமையாக பதிவேற்றவும் (மண்டலம் 01 முதல் மண்டலம் 6 வரை)
ReplyDelete